10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை - பதுளை - பண்டாரவளை மண்சரிவை அகற்றும் பணியில் சிரமம்!
இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹாலி-எல, 7ம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை - பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
நேற்றிரவு அங்கு மண்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வீதியிலுள்ள மண்மேட்டை அகற்றும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்மேட்டை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
பதுளை - பண்டாரவளை வீதியின் 7ஆம் கட்டை பகுதியில் நேற்று இரவு (09) ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.