மன்னம்பிட்டி- கல்லெல்ல வீதிக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!

மன்னம்பிட்டி- கல்லெல்ல வீதிக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு!

மட்டக்களப்பு புகையிரத நிலையம் தப்பொழுது உள்ள நிலைப்பாடு.

ஆரையம்பதியில் தொடர்ந்து கடுமையான மழை பெய்கிறது.

அத்துடன், மாவடிவேம்பு, சித்தாண்டி பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கல்லடி, செங்கலடி, இதயபுரம், கரையாக்கந்தீவு, கிரான் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் மன்னம்பிட்டி - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, (10.01.2024) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:????

அம்பாறை மாவட்டம்: 

பொத்துவில் 79.6mm,

அம்பாறை 139.1mm,

இக்கினியாகலை 101.5mm,

எக்கல் ஓய 80.0mm,

பன்னலகம 97.3mm,

மகா ஓய 74.3mm,

பாணமை 66.0mm,

லகுகல 88.2mm,

திகவாவி 120.0mm,

அக்கரைப்பற்று 75.1mm, இலுக்குச்சேனை 88.6mm, 

சாகமம் 67.1mm,

றூபஸ்குளம் 157.3mm,

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 75.4mm.

மட்டக்களப்பு மாவட்டம்: 

மட்டக்களப்பு நகர் 99.4mm,

உன்னிச்சை 102.0mm,

உறுகாமம் 103.9mm,

வாகனேரி 174.7mm,

கட்டுமுறிவுக் குளம் 98.0mm,

கிரான் 125.0mm,

நவகிரி 82.5mm,

தும்பன்கேணி 112.0mm,

மைலம்பாவெளி 130.0mm.

ஆயித்தியமலை na,

பாசிக்குடா 95.0mm.

திருகோணமலை மாவட்டம்: 

திருகோணமலை 25.1mm,

கடற்படைத்தளம் 61.9mm,

குச்சவெளி 17.0mm,

பாலம்பட்டாறு na,

கந்தளாய் 71.7mm.

முல்லைத்தீவு 1.8mm.

யாழ்ப்பாணம் 0.7mm.

மன்னர் 9.8mm.

வவுனியா 14.7mm.