அவதூறு பரப்பும் சமூக ஊடக கணக்குகள் மீது சட்ட நடவடிக்கை

அவதூறு பரப்பும் சமூக ஊடக கணக்குகள் மீது சட்ட நடவடிக்கை

ஐந்து சமூக ஊடகக் கணக்குகள் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பி. சசி மகேந்திரனுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அவதூறான மற்றும் தவறான தகவல்கள் தொடர்பான வழக்கு தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 16 ஆம் திகதி சைபர் குற்ற கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீதியரசர் சசி மகேந்திரன் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் குறித்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர நீதவான் மேலும் உத்தரவு பிறப்பித்தார்.