கடும் மின்னல் தொடர்பில் அவசர எச்சரிக்கை

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.
இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் பலத்த மின்னல் தாக்கத்திற்கு அதிக வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.