இலங்கையில் அதிகூடிய விலைக்கு ஏலம் போன நீல மாணிக்கம்!
கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல நிற மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
கஹவத்தை – கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல நிற மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
நேற்று (16) இடம்பெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இது ‘நீல மாணிக்க’ வகை இரத்தினக்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்கக்கல் 99 கரட்கள் என்பதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மேற்பார்வையில் கஹவத்த பிரதேசத்தில் இந்த விலைமதிப்பற்ற நீலக்கல் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் கஹவத்தை நகருக்கு அண்மித்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் மாணிக்கக்கல் தோண்டிய போது இந்த பெறுமதியான நீல மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.