மீலாதுன் நபி திருநாள் இன்று நினைவு கூரப்படுகின்றது!
உலகளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களால் மீலாதுன் நபி திருநாள் இன்று நினைவுகூரப் படுகின்றது.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களால் மீலாதுன் நபி திருநாள் இன்று நினைவுகூரப் படுகின்றது.
நபிகள் நாயகத்தின் நினைவு தினம் இவ்வாறு மீலாதுன் நபி தினமாக நினைவு கூரப்படுகின்றது.
இதேவேளை உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்களின் மார்க்கப்போதகராக விளங்கிய நபிகள் நாயகத்தின் உபதேசங்கள் இன்றைய சமூகத்தில் நிகழும் சூழ்நிலையை போக்க உதவும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் அனுபவித்த கடினங்கள் கொஞ்சநஞ்சமல்ல அப்படிப்பட்ட தருணத்தில் பொறுமையும் மௌனமும் தான் அவரது கூரிய ஆயுதங்களாக இருந்தனக.
பரஸ்பர புரிதல் சகோதரத்துவம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் நேர்மை என அவர் வாழ்நாள் முழுவதும் காத்து வந்த பண்புகள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை கொண்டாடும் நாம் வாழ்வில் இலட்சியமாக கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதெரிவித்துள்ளார்.
இதேவேளை சமாதானம் அமைதி என்பவற்றை தோற்கடிப்பதற்காக படுப்பட்ட நபிகள் நாயகத்தின் வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே இன்றைய நன்நாளில் அனைத்து மக்களும் செய்யக்கூடிய சாலச்சிறந்த விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.