விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் : வைரலாகும் பதிவு!

இந்திய உத்தர்காண்ட் மாநிலத்தின் நைனிடால் மலைப்பாதையில் பயணித்த கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது.

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் :  வைரலாகும் பதிவு!

அந்த வழியில் பயணித்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமி விபத்தைக் கண்டு 

உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து பள்ளத்தில் சிக்கிய நபரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, மொஹம்மட் ஷமி வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவரை மீட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்தில் பாதிக்கப்பட்டவர் மிகவும் அதிர்ஷ்டசாலி.

கடவுள் அவருக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுத்துள்ளார்.

அவரது கார் நைனிடால் அருகே மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னால் கீழே கவிழ்ந்தது. 

நாங்கள் அவரை மிகவும் பாதுகாப்பாக வெளியே எடுத்தோம்” என பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமியின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.