2023இல் 100,000ற்கும் மேலான ஆபாச புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் பரவல் - டிரான் அலஸ்
2023ஆம் ஆண்டில் மாத்திரம் சமூக வளைத்தளங்களில் 100,000ற்கும் அதிகமான ஆபாச புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், சமூக ஊடகங்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அநீதி இழைக்கபடுவதாகவும் , துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறை, மத நல்லிணக்கம் என்பன சீர்குழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வருடத்தில் 8,000 இற்கும் அதிகமானவர்கள் இணையத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதில்
869 பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகளும், 506 நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தேசிய பாதுகாப்பை பாதிக்கும் சம்பவங்கள் தொடர்பில் 88 முறைப்பாடுகளும், பண மோசடி குறித்து 457 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ள நிலையிலேயே இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.