நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை ஓகஸ்ட் 21 ஆம் திகதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை ஓகஸ்ட் 21 ஆம் திகதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
மகோற்சவத்துக்கு முதல் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடிச்சீலை கையளிக்கும் மரபார்ந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு, சட்டநாதர் சிவன் ஆலயப்பகுதியில் வதியும் செங்குந்த மரபினரால் வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை பாரம்பரிய முறைப்படி வேல் மடம் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிய தேரொன்றில் எடுத்து வரப்பட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழா வரையான 25 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.