போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து 12 வருடங்கள் பணியாற்றிய அரச அதிகாரி - எவ்வாறு கனடா சென்றார்?

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து 12 வருடங்களுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர்கள், கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் அண்மையில் அழைக்கப்பட்டபோதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அதிகாரி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக பல தடவைகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்.

 பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் வேதனம் மற்றும் இதர கொடுப்பனவுகளை அவர் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய அமைச்சின் அனுமதியின்றி அந்த நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவன அதிகாரிகள் கோப் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அவரது கல்விச் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், குறித்த நபர் கடந்த வருடம் எந்தவித அனுமதியும் பெறாமல் கனடா சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முப்பதுக்கும் குறைவான அதிகாரிகளே உள்ளதாகவும், 12 லட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் தனியார் கட்டடமொன்றில் அந்த நிறுவனம் இயங்கிவருவதாக கோப் குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.