ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு

ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு

வவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றது.

விபத்தில்  67 வயதான முதியவரே  உயிரிழந்துள்ளார். 

யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற ரயில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.