புதிய அமைச்சரவை பதவியேற்பு - நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்?
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்துத் க்கு பல அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு, சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு
மற்றும் கட்டுமானத்துறை ஆகிய அமைச்சுகளின் பொறுப்பு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் விஜித்த ஹேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு உள்ளிட்டட் பல முக்கிய அமைச்சுச் பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேநேரம், நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, தொழில் அமைச்சு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை ஆகிய அமைச்சு பொறுப்புகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுட்றவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுகளும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை பெரும்பாலும் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் பல அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க வேண்டியுள்ளது.
எனவே தொடர்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.