அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் கணக்கில் விசேட குறிப்பொன்றை இணைத்து நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிக திறன் கொண்ட  மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இலங்கை காவல்துறையின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கும் அது தொடர்பான விசேட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

"இளைஞர்களின் குரலுக்கு செவி சாய்த்து அவர்களின் தேவைகளை புரிந்துகொண்டு எனக்கு இதற்கான அனுமதியை வழங்கிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான முன்மொழிவை அனுமதிக்கும் அதிகாரத்தை நான் வழங்குகிறேன்.

அதிக திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை இலங்கை காவல்துறையின் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கும் அது தொடர்பான விசேட தேவைகளுக்கும் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்த இலக்கின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.