அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு !
ச.தொ.ச நிறுவனம் நேற்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 850 ரூபாயாகும்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ வெங்காயத்தின் விலை 120 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாயாகும்.
அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை 50 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 445 ரூபாவாகும்.
1 கிலோ வௌ்ளைபூடு 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 680 ரூபாயாகும்.
1 கிலோ உருளைக்கிழங்கு 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாயாகும்.
அத்துடன் சிகப்பு பருப்பின் விலையை 7 ரூபாயினாலும் வெள்ளை அரிசியின் விலையை 3 ரூபாயாலும் குறைக்கவும் லங்கா ச.தொ.ச நிறுவனம் தீர்மானித்துள்ளது.