இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக மீண்டும் மனு!
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலம் முழுமையாக அரசியலமைப்பின் 4 ஆவது சரத்தை மீறுவதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.