ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு!

ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான இடங்கள் குத்தகைக்கு!

ரயில் திணைக்களத்துக்கு சொந்தமான இடங்களில் ரயில் பணியாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும், நீண்ட கால குத்தகை அடிப்படையில் அவர்கள் அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

நாவலபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான இடங்களில் சட்டவிரோத குடியிருப்புகள் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் அவர்களுக்கு குறித்த இடங்களுக்கான உரிமையை வழங்க முடியாது.

ரயில்வே கட்டளை சட்டத்துக்கு அமைய குறித்த இடங்களுக்கு வரி செலுத்தி நீண்ட குத்தகை அடிப்படையில் அவர்கள் அங்கு தங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.