மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

தென்னை பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்காக கப்ருக நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைக்கப்படும் என்று தெங்கு பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

இந்த செயல்முறையின் முதல் திட்டம் கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

அதன்படி, கப்ருகா கடன் திட்டத்திற்கு இணையாக, இந்த கப்ருகா நிதி முகாமை சபை ஒன்றியம் மறுசீரமைப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டுக்குள் 2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட தெங்கு பயிர்ச்செய்கை சபை திட்டமிட்டுள்ளது.

இவற்றில் ஒரு மில்லியன் மரங்கள் வடக்கு தென்னை முக்கோண வலயத்திற்கு அருகில் நடப்படும் என்று சுனிமல் ஜயக்கொடி அத தெரணவிடம் தெரிவித்தார்.