40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளனர்!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார அணையாடை பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட குடும்ப வருமானம் தொடர்பான அறிக்கையில் காட்டப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்டில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.