ரயில் சேவையில் பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்!

தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால், எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடுமென ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையை தீர்க்க துரிதமாக செயற்படுவது அத்தியாவசியமானதென அதன் தலைவர் எச்.ஆர்.பி.உதயசிறி தெரிவித்தார்.
நாளாந்தம் ரயில்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் கோபமாகவுள்ளதாகவும் இதற்காக உடனடியாக பயிற்சி பெற்ற ஆட்களை நியமிக்குமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.