ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டதா? – பொலிஸாரின் பதில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள பொலிஸார், அவரின் பாதுகாப்பிற்காக 163 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வழங்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு செயற்பட்டு வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பிற்காக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை (Ex-PSD 8 Division) நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் தற்போதைய பாதுகாப்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளரின் (PSD) வழிகாட்டலின் கீழ் விசேட அதிரடிப்படையின் (STF) 50 பணியாளர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குவதாக நிஹால் தல்துவ உறுதிப்படுத்தினார்.