ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம்!

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபாய் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர்

ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.

இப் போட்டியில் மும்பை அணி 215 ஓட்டங்கள் எடுத்த நிலையில், சேஸிங் செய்த லக்னோ 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐ.பி.எல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22ன் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பண்டுக்கு (Rishabh pant)இந்திய மதிப்பில் 24 லட்சம் ரூபாயும், இம்பேக்ட் வீரர் உட்பட அணியின் மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.