இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயர்தர மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ..

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயர்தர மதுபான போத்தல்கள் கைப்பற்றல் ..

இந்தியாவின் பெங்களூருவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயர்தர மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தபோது விமான நிலைய சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட பரிசீலனையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் பெறுமதி 47 இலட்சம் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் பெறுமதி 42 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.