மதுவிருந்தில் கைக்கலப்பு - யாழ். இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு , கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்து, நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்டனர்.
அதன் போது எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் , கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் மதுபோதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியுள்ளது.
அதன்போது, உயிரிழந்த ஜெகதீஸ்குமாரை கட்டி வைத்தும் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.