வாழைச்சேனை - ஓமனியாமடுவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை - ஓமனியாமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
valaichenai - Omaniyamudu

வாழைச்சேனை - ஓமனியாமடு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை - கிண்ணியடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேய்ச்சலுக்கான கால்நடைகளுடன் நேற்று வீட்டிலிருந்து சென்றிருந்த குறித்த நபர்; இன்று காலை வரை வீடு திரும்பாததால் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன்போது, இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.