சுகாதாரத்துறை பிரச்சினைக்கு தீர்வு காண கையெழுத்து வேட்டை!

மருந்துத் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை வலியுறுத்தி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கைகள் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன.

சுகாதாரத்துறை பிரச்சினைக்கு தீர்வு காண கையெழுத்து வேட்டை!

குறித்த கையெழுத்து வேட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்காவின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்ட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பலர் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை, 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் தற்போது நிலவும் மருந்து தட்டுப்பாடு குறைவடையுமென அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.