பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாமெனவும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, 177,588 பேர் (64.73%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும், 456 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.