அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்துக் கலந்துரையாடிய உக்ரைன் ஜனாதிபதி

நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி உட்பட பல உலகத் தலைவர்கள் வத்திகானுக்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் பிரான்சிஸ் திருத்தந்தையின் நல்லடக்க ஆராதனைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கியும் இன்று விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.