272 பயணிகளுடன் லண்டனுக்கு பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

லண்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த குறித்த விமானத்தில் பயணியொருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக ஆஸ்திரியாவின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இந்த சம்பவம் கடந்த 1ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தொழில்நுட்பக்கோளாறு
இதன்பின்னர் மீண்டும் லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த இந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வியன்னாவில் இருந்து புறப்படத் தாமதமாகியுள்ளது.
இந்நிலையில், விமானம் புறப்படும் வரை ஐரோப்பாவுக்கான வீசாவை பெற்றிருந்த அனைத்து பயணிகளையும் வியன்னா நகரில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து விமானம் நேற்று (2) லண்டன் நேரப்படி 21:30 மணி நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.