கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நாளை எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நாளை எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!

அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் மனித உடலில் உணரக் கூடிய 'எச்சரிக்கை' மட்டத்தை விடவும் அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதுதவிர, கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் அவ்வாறே அதிக வெப்பநிலை பதிவாகக் கூடும்

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவெளியில் தொழிலில் ஈடுபடுபவர்களை அதிக நீரை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அதிக வெப்பமான காலநிலையின் போது சிறுவர்களை மூடிய வாகனங்களில் விட்டு செல்வதை தவிர்க்குமாறும், வெள்ளை மற்றும் இளநிற ஆடைகளை அணியுமாறும் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிக வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு, தசைப்பிடிப்பு மற்றும் தீவிர சோர்வு போன்ற நோய் நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.