10 நாட்களுக்குள் நீதிமன்றில் ஆஜராக காலக்கெடு!

தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீரவை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.

ஹொரணை நீதவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கின் மேலதிக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவே, தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹொரணையில் உள்ள தொழிற்சாலையொன்றில் 2018ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பில், அந்த தொழிற்சாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவருக்கு எதிராக சாட்சியங்களை உருவாக்கி சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மற்றும் பாணந்துறை மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் வலுவற்றதாக்குமாறு கோரி, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் மேன் முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகளை எதிர்வரும் 14ம் திகதி முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.