முதலாவது இன்னிங்சில் 49 ஓட்டங்குக்குள் முடங்கியது கொழும்பு இந்துக் கல்லூரி அணி!
இந்துக்களின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்துக்களின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் சிறப்பான பந்து வீச்சுக் காரணமாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதனை தொடர்ந்து பலோ ஓன் முறையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.
கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணித்தலைவர் டிலோஜன் 17 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சார்பில் பந்து வீச்சில் கஜாநாத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்துக்களின் மாபெரும் சமர் என வர்ணிக்கப்படுகின்ற கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிகளுக்கு இடையிலான
கிரிக்கெட் போட்டி, 12வது தடவையாக 2023ஆம் ஆண்டு கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்றைய தினம் ஆரம்பமாகியது.
இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து கொழும்பு இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
கொழும்பு இந்துக்கல்லூரி இரண்டாவது இன்னிங்சில் 15 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களை பெற்றதுடன் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.