மக்களின் மனங்களை வருடும் மட்டக்களப்பின் குளங்கள்!
வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மட்டக்களப்பிலுள்ள சிறிய குளங்கள் முற்றாக நிரம்பியுள்ளன.
இவ்வாறு நீர் நிரம்பியுள்ள குளங்களில் ஆற்றுவாழைத் தாவரங்கள் பூத்துக் குலுங்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரிய போரதீவு, பழுகாமம், கோவில் போரதீவு, பொறுகாமம், உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள சிறிய குளங்களில் இவ்வாறு ஆற்றுவாளைத் தாவரங்கள் பூத்துக்குலுங்கி அக்குளங்களுக்கும் கிராமங்களுக்கும் மேலும் அழகு சேர்க்கின்றன.
இதேவேளை பிரதான வீதி ஓரங்களில் இக்குளங்கள் அமைந்துள்ளதனால் வீதியில் பயணம் செய்யும் பொதுமக்களும் பூக்கள் நிறைந்துள்ள குளங்களை பார்த்து இரசித்துச் செல்வதையும், கானாங்கோழி உள்ளிட்ட பறவைகளும் குளங்களில் உலாவுவதையும் அவதானிக்க முடிகின்றது.