விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்- மனைவியுடன் வாக்களித்த நாமல்!

விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்- மனைவியுடன் வாக்களித்த நாமல்!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தனது மனைவியுடன் இன்று (21) காலை வாக்களித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையிட்டு அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. 

இதற்கமைய, நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்கள் என பலரும் வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.