மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கெப்படிப்பொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோகிராம் கெரட்டின் மொத்த விலை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் 180 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், ஒரு கிலோகிராம் தக்காளி 200 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கோவா 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.