கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் இலங்கை கடன் சுமையால் சிரமங்களை எதிர்கொள்ளும்  - தியோ மெரிட்!

கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் இலங்கை கடன் சுமையால் சிரமங்களை எதிர்கொள்ளும்  - தியோ மெரிட்!

இலங்கையின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் இலக்குகளின் படி, கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு பின்னரும், இலங்கை கடன் சுமையால் பல சிரமங்களை எதிர்கொள்ளும் என உலகலாவிய இறையாண்மை கடன் ஆராய்ச்சியாளர் தியோ மெரிட் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பொது நிதிக் குழுவின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தப் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு இலக்குகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய திட்டமொன்றே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கும் வழங்கியுள்ளது.

இலங்கையால் வலுவான வருவாய்த் தளத்துடன் தாங்கிக் கொள்ளக்கூடிய கடனை விட அதிகமான கடனைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இலங்கை கடந்த காலத்தில் நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்தமையே இதற்கு பிரதான காரணமாகும்

இந்தநிலையில், கடந்த 2022இல் இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்கப்பட்டது.

அத்துடன், கடன் மறுசீரமைப்பின் பின்னரான காலப்பகுதிகளில் இலங்கையின் கடன் சுமை மற்றும் மறுநிதியளிப்பு அபாயம் என்பவற்றை குறைப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உலகலாவிய இறையாண்மை கடன் ஆராய்ச்சியாளர் தியோ மெரிட் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, நிதிக் கொள்கைகள் மற்றும் கடன் முகாமைத்துவக் கொள்கைகள் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதை இலங்கை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை, உரிய முறையில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், கடன் மீளளிப்பதற்கான நிதி உத்தரவாத காலத்தை சீனா முதன் முறையாக இலங்கைக்கு மாத்திரமே வழங்கியுள்ளது 

இதற்கமைய, இலங்கைகான வெளிநாட்டுகடனை மீளச் செலுத்தல், ஸ்திரத்தன்மையை அடையும்.

இதன்காரணமாக வெளிப்புற நிதிகள் நாட்டை வந்தடையும் என உலகலாவிய இறையாண்மை கடன் ஆராய்ச்சியாளர் தியோ மெரிட் தெரிவித்துள்ளார்.