ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது!

ரயில்வே திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) மாலை  கைவிடப்பட்டது.

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது!

இன்று மாலை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் போராட்டத்தை மேற்கொண்டவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போது சாதகமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டது.

5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் நேற்று முன்தினம் தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்றைய தினம் 150 ரயில் சேவைகள் ரத்தாகியது. இன்று காலை முதல் 40க்கும் மேற்பட்ட ரயில்வே சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ரயில்வே சாரதிகளின் போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியாக உள்ள ரயில்வே நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

இதேவேளை, கொழும்பு - கோட்டை மற்றும் மருதானை உள்ளிட்ட 32 ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.