அமெரிக்காவின் Shell ஷெல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கையில்..!

அமெரிக்காவின் பெட்ரோலிய விநியோக நிறுவனம் RM Parks Inc. தனது Shell தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக

அமெரிக்காவின் Shell ஷெல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இலங்கையில்..!

அமெரிக்காவின் பெட்ரோலிய விநியோக நிறுவனம் RM Parks Inc. தனது Shell தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் 110 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

RM Parks Inc. மற்றும் Shell கூட்டாண்மையூடாக 200 பெட்ரோல் நிரப்பு நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மின்சாரத்தில் இயங்கத்தக்க வாகனங்களுக்கான EV Charging வசதிகளுடன் பல்பொருள் அங்காடிகளில் சேவைகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.