அநுரவின் வெற்றி, உண்மையான மாற்றத்துக்கான வெற்றி - சாலிய பீரிஸ்!
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் எதிர்பார்க்கப்படும் வெற்றியானது உண்மையான மாற்றத்திற்கான பொதுமக்களின் வலுவான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மகத்தான தேர்தல் வெற்றி கிடைத்தபோதும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியதால் திடீரென முடிவடைந்த கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்று திசாநாயக்கவை பீரிஸ் எச்சரித்துள்ளார்.
இந்த வெற்றியானது, பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கையை வாழக்கூடிய ஊழல், குரோதம் மற்றும் ஆதரவற்ற தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்பட்டு, அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கானவர்களின் கனவாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், புதிய ஜனாதிபதி கணிசமான சவால்களை எதிர்கொள்வார் என்று பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பரந்த அதிகாரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், பொதுப் பொறுப்புணர்வுடன் அவற்றைப் பிரயோகிக்குமாறும் திசாநாயக்கவுக்கு, பீரிஸ் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.
ஜனாதிபதி என்ற வகையில் அவர் ஒரு ஐக்கியமான ஒருவராக இருக்க வேண்டும் என்பதை புதிய ஜனாதிபதி உணர வேண்டும். கிட்டத்தட்ட பாதி வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை, ஆனால் அவர் அந்த மக்களினதும் ஜனாதிபதி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பீரிஸ் கூறியுள்ளார்.