கேரள ரசிகர்களுக்கு மலையாளத்தில் நன்றி சொன்ன விஜய்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்.
நடிகர் விஜய் லியோ திரைப்பட வெற்றியை தொடர்ந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
GOAT படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள சில நாட்களுக்கு முன்பு கேரளா வந்த நடிகர் விஜய்-க்கு அம்மாநில ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மேலும் படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கியிருக்கும் இடங்களில் தினந்தோரும் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடியது.
இந்த நிலையில், கேரள ரசிகர்களுக்காக நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.