கோட் படம் எப்படி இருக்கிறது? முதல் விமர்சனம்!

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.
பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி, மோகன், ஜெயராம், யோகி பாபு என பலரும் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டதட்ட 1000 ஸ்க்ரீன்களில் இப்படம் வெளிவருவதாக தகவல் தெரிவிகின்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் GOAT திரைப்படத்தின் ப்ரிவியூ ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. இதில் GOAT படத்தை பார்த்த விஜய்யின் மனேஜர் ஜெகதீஷ் தனது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
முதல் விமர்சனம்
இந்த பதிவில் 'VP சார் என குறிப்பிட்டு Fire எமோஜி மற்றும் பல ஹார்டின்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்கும் எமோஜிகளையும் பதிவு செய்துள்ளார். மேலும் வெங்கட் பிரபுவின் கையை மகிழ்ச்சியுடன் பிடித்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் GOAT திரைப்படம் செம மாஸாக வந்துள்ளது என தெரிகிறது. கண்டிப்பாக திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசாக GOAT அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.