எம்.பி.க்களுக்கு வாகனங்கள் வழங்க நாடாளுமன்றக் குழு அனுமதி!

தாங்க முடியாத வாழ்க்கைச் செலவில் இலங்கையர்கள் தவிக்கும் வேளையில் நிவாரணமாக வாகனம் கொண்டு வருவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு நாடளுமன்ற உறுப்பினர் குழுவொன்றின் கோரிக்கையை நாடளுமன்ற உறுப்பினர்கள் குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுப்பணித்துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாக தர அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை போன்று தங்களுக்கும் வாகன உரிமம் வழங்க வேண்டும் என்ற நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நாடளுமன்ற உறுப்பினர்கள் குழு சாதகமாக பரிசீலித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது பாவனைக்காக வரியில்லா வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்தவுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதனை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுக்கு அதகளம், எம்.பி.க்களுக்கு குதூகலம்!