இன்றுடன் வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவடைகிறது!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்