பிணை முறி உரிமையாளர்கள் கோரும் ஊழலுக்கு எதிரான பொறிமுறையை அமுல்படுத்த அரசாங்கம் தயங்குவது ஏன்?

வெரிட்டி ஆய்வு நிறுவனம் ஒரு புதிய கொள்கைக் கருவியை உருவாக்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிணை முறி பத்திரப்பதிவுதாரர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக எமது நாட்டு கடன்களுக்கான வட்டி வீதத்தை நிபந்தனையுடன் குறைப்பதற்கு பத்திரப்பதிவுதாரர்களுடன் சில இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பத்திரப்பதிவுதாரர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளில், மக்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, நல்லாட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பொறிமுறையானது வலுவான கால அட்டவணையுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க இதன் மூலம் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியும், ஆனால் வங்குரோத்து நாட்டில் திருடுவதற்கு இடமளித்து தேசிய சொத்துக்கள் மற்றும் வளங்களை அபகரிக்கும் இலஞ்ச ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை பேணுவதே அரசாங்கத்தின் நோக்கமா இருந்தால்,

பிணை முறி உரிமையாளர்களிடமிருந்து எந்தவித நிவாரணமும் கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

இந்த முன்மொழிவுகள் ஐ.எம்.எப். ஒப்பந்தத்தில் கூட இருப்பதால் நல்லாட்சியை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். 

இவற்றை மேற்கொள்வதால் ஒரு நாடாக நாம் வாங்கிய கடனுக்கான வட்டியை குறைக்கலாம். 

தேர்தலுக்கு முன்னர் ஊழல் அல்லது சுரண்டல் மற்றும் கொள்ளைகளை அனுமதிப்பதற்கா அரசாங்கம் இந்த நிபந்தனைக்கு இணங்க தாமதப்படுகிறது? என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் பதிலை நாங்கள் அறிய விரும்புகிறோம். 

ஊழல் எதிர்ப்பு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். 

ஊழலை ஒழிப்பதிலும், நல்லாட்சியை நடத்துவதிலும் விருப்பமின்மையா, இந்த கட்டமைப்புகளை நிறுவ அரசாங்கம் தயக்கம் காட்ட காரணம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 158 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், அம்பலாந்தோட்டை, மலாய் கொலனி, 

அல்-அக்பர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.