மாலைதீவிற்கு அருகே காற்று சுழற்சியானது மேற்காக இலங்கையை நோக்கி நகர்கிறது!
நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடலில் மாலைதீவிற்கு அருகே நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இதனைத் தவிர இலங்கையின் தென்கிழக்காக உருவாகி இருக்கின்ற காற்று சுழற்சியானது இலங்கையை எதிர்வரும் 03ஆம் திகதியளவில் நெருங்கி 04, 05, 06ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்குப் பகுதியை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் எதிர்வரும் 07 - 10ஆம் திகதிகளில் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களை அல்லது வட இலங்கையை நெருங்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் பொங்கல் தினத்திற்கு முன்னரான சில நாட்களில் காற்று சுழற்சி காரணமாக அதிக மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது.
இது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் விரிவாக தகவல் வெளியிடப்படும்.
எனவே தற்போது உள்ள மழையுடனான காலநிலையானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எதிர்வருகின்ற 12ஆம் திகதி வரை தொடரும் சாத்தியம் உள்ளது.
வட மாகாணத்தை பொறுத்தவரையில் (இன்றுள்ள வானிலை அமைப்பின்படி) வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 02ஆம் திகதி முதலும், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 04ஆம் அல்லது 05ஆம் திகதி முதல் இடையிடையே ஓரளவு மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது.
இன்று (29.12.2023) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களில் கிடைக்கப்பெற்ற மழை வீழ்ச்சிகளின் அளவுகள் பின்வருமாறு:????
(கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கையில் அதி கூடிய மழைவீழ்ச்சியாக றூபஸ்குளம் (அம்பாறை மாவட்டம்) 170.0mm மழை வீழ்ச்சியும் அதி கூடிய வெப்பநிலையாக 32.4°c மத்தளவிலும் அதி குறைந்த வெப்பநிலையாக 15.0°c நுவரெலியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)
அம்பாறை மாவட்டம்:
பொத்துவில் 49.9mm,
அம்பாறை 77.4mm,
இக்கினியாகலை 75.5mm,
எக்கல் ஓய 40.0mm,
பன்னலகம 66.7mm,
மகா ஓய 67.8mm,
பாணமை 84.7mm,
லகுகல 48.5mm,
தீகவாவி 48.0mm,
அக்கரைப்பற்று 32.4mm, இலுக்குச்சேனை 28.4mm,
சாகமம் 36.8mm,
றூபஸ்குளம் 179.0mm,
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை 19.2mm.
மட்டக்களப்பு மாவட்டம்:
மட்டக்களப்பு நகர் 62.6mm,
உன்னிச்சை 68.0mm,
உறுகாமம் 97.5mm,
வாகனேரி 119.3mm,
கட்டுமுறிவுக் குளம் 32.0mm,
கிரான் 49.0mm,
நவகிரி 98.0mm,
தும்பன்கேணி 60.0mm.
திருகோணமலை மாவட்டம்:
திருகோணமலை 4.2mm,
கடற்படைத்தளம் 4.7mm,
குச்சவெளி 2.1mm,
பாலம்பட்டாறு na,
கந்தளாய் 28.3mm.
வட மாகாணம்:
யாழ்ப்பாண மாவட்டம்:
யாழ்ப்பாணம் 3.7mm,
அச்சுவேலி 15.4mm,
பருத்தித்துறை 0,
நயினாதீவு 0,
நீர் வழங்கல் நிலையம் 9.1mm,
நீர்ப்பாசன திணைக்களம் 0.9mm,
நெடுந்தீவு 2.9mm,
ஆணையிறவு 3.6mm,
சாவகச்சேரி 0.4mm,
தெல்லிப்பழை 0,
அம்பன் 0,
கிளிநொச்சி மாவட்டம்:
கிளிநொச்சி 3.8mm,
இரணைமடுக்குளம் 4.7mm.
முல்லைத்தீவு மாவட்டம்:
முல்லைத்தீவு 0.5mm,
அலம்பில் na,
ஒட்டுசுட்டான் na,
வள்ளிபுனம் Trace.
அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவு செய்யப்பட்ட மழை வீழ்ச்சிகளின் அளவுகள் இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.