சரக்கு ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

ஹாலி-எல பதுளை ரயில் மார்க்கத்தில் ஹப்புவத்தை பகுதியில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண்ணை பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹப்புவத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.