இறப்பர் பால் சேகரிப்பு பிரதான காரியாலத்திற்கு முன் துப்பாக்கிச் சூட்டு - பொலிஸ் விசாரணை ஆரம்பம்!
கொழும்பு - கிருலப்பனை மாவத்தையில் அமைந்துள்ள இறப்பர் பால் சேகரிப்பு நிறுவனத்தின் பிரதான காரியாலத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிருலப்பனை - மாவத்தை பகுதிக்கு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த அலுவலகத்தின் நுழைவாயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.