கனடாவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்!

கனடாவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்!

கனடாவின் எட்டோபிகோக் (etobicoke) எனும் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக கனேடிய  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டோபிகோக்கில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐந்து பேரில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக ரொறொன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகன நிறுத்துமிடத்தில் அந்த நாட்டு நேரப்படி நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 குறித்த சம்பவத்தில் பலியானவர் 50 வயதுடையவர் என்றும் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச் பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.