பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் குறித்து அச்சம் தேவையில்லை - நாஸா!

பூமியை நோக்கி வரும் மிகப்பெரிய விண்கல் குறித்து அச்சம் தேவையில்லை - நாஸா!

பூமியை நோக்கி 160 அடியுள்ள JY1 என்ற பாரிய விண்கல் 37,070 கிலோ மீற்றர் வேகத்தில் வந்துக்கொண்டிருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது.

தற்போது பூமி பயணிக்கும் பாதையில் JY1 என்ற விண்கலம் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாஸா தெரிவித்துள்ளது.

குறித்த விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் எனவும் இது குறித்து அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் நாஸா அறிவுறுத்தியுள்ளது.

இந்த சிறுகோள் சுமார் 4.16 மில்லியன் மைல் தொலைவில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்திரனுக்கான தூரத்தை விட 17 மடங்கு அதிகமாகும்.

குறித்த விண்கல்லின் செயற்பாட்டை நாஸா துல்லியமாக கண்காணித்து வருகின்றது 

 இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.