தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்!

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்!

தூரப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மாதிவல வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீடுகளுக்கான உபயோகப் பொருட்கள் கட்சியின் மூலம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வீட்டு உபயோகப் பொருட்கள், எரிவாயு, மின்விசிறி போன்ற பொருட்களை கட்சி சார்பில் குறித்த வீடுகளுக்கு வழங்கவுள்ள நிலையில் இதுவரையில் இந்த பொருட்களை அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் வாங்கியுள்ளனர்.

இவ்வாறு அரசியல் கட்சி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குவது இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்.