VAT வரி திருத்தச் சட்டமூலம் நாளை நிறைவேற்றப்படும் சாத்தியம்!
VAT எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் நாளை மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்றம் இன்று (10) கூடியிருந்தது.
எனினும், சபை கோரம் இன்மையால் சபை நடவடிக்கைகளை நாளை காலை 9.30 வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருடன் கலந்துரையாடி, குறித்த சட்டமூலத்தை நாளைய தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.